ரிஹ்லா சரந்தீப் – பாவா ஆதமின் பாத காணி – 1
இலங்கையில் நான் மாணிக்க வணிகம் புரிந்து கொண்டிருந்த காலமது. அப்படியான ஒரு பயணத்தில் என் உம்மாவிடமிருந்து கேள்வியொன்று எழுந்தது. விடையையும் கையுடன் கொண்டு வந்த கேள்வியது. “நீங்கள்லாம் சிலோன்ல போய் வாங்கீட்டு வர்றியளே கல்லு அது எங்கேந்து வந்தது தெரியுமா?” “ஆதம் நபிய்ய சொர்க்கத்துலேந்து கீழே எறக்கும்போது அவங்களோட ஒட்டிக்கிட்டு வந்து பூமியில் சிதறுனதுதான் ஒங்க கல்லும் மாணிக்கமும்”. இலங்கையில் இன்று கிடைக்கும் புஷ்பராகம், கோமேதகம் இனத்தைச் சேர்ந்த மாணிக்கக் …