ரிஹ்லா துளுநாடு – மொழிகளின் நிலம் 3
கேரள மாநிலம் கொண்டோட்டி மாப்பிளா கலா அகாடமி மொக்ரால் கிளையின் சார்பாக மொக்ரால் பள்ளிக்கூடத்தில் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்வுகளும் பொது நிகழ்வுகளும் நிறைந்த நாள் என்ற போதிலும் தொலைவிலிருந்து வரும் எங்களுக்காக துரித ஏற்பாடொன்றைச் செய்திருந்தனர் மொக்ரால் வாசிகள்.
