ஆடு ஜீவிதம் – நிறைவுப்பகுதி
. தொழிலாளி முதலாளி என்று வரும்போது இறைவனுக்கு அஞ்சுவதை விடவும் மத சகோதரத்துவத்தை விடவும் வர்க்க பாசம்தான் ஸவூதி முதலாளிகளிடமும் அந்த நாட்டு அரசிடமும் மேலோங்குகின்றது.
. தொழிலாளி முதலாளி என்று வரும்போது இறைவனுக்கு அஞ்சுவதை விடவும் மத சகோதரத்துவத்தை விடவும் வர்க்க பாசம்தான் ஸவூதி முதலாளிகளிடமும் அந்த நாட்டு அரசிடமும் மேலோங்குகின்றது.
கமீஷ் மிஷ்யத், ஸவூதி அஸ்ஸலாமு அலைக்கும் ! தேவரீர். வாப்பா அவர்களின் சமூகத்திற்கு !! உங்கள் அன்பு மகன் மொகுதூம் எழுதிக் கொள்வது, 40 ஆடுகள் , 1 கழுதை இவற்றுடன் நான் இங்கு சுகம்.
“நான் பள்ளிக்கூடம் போவதற்கில்லை. வீட்டிற்கும் இப்போதைக்கு வரப் போவதில்லை” நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக வீடு துறந்து கோழிக்கோட்டிற்கு தப்பிச்சென்ற வைக்கம் முஹம்மது பஷீர், தன்னை அழைத்து போக வந்த தந்தையிடம் கையளித்த சொற்கள் இது. மகன் உதிர்த்த சொற்களின் பாரம் உண்டாக்கிய சோர்வு துயரம் கண்ணீர் எல்லாம் ஒரு சேர கொப்பளிக்க வெறுங்கையுடன் திரும்பினார் வைக்கம் முஹம்மது பஷீரின் வாப்பா.
விரிந்துப் பரந்த அம்மாளிகையில் ஓர் அறை. அவ்வறையின் நடுவில் ஒரு மேசை. மேசையின் எதிரும் புதிருமாக போடப்பட்டிருந்த இருக்கைகளில் மேனாள் ஸவூதி அரசர் ஃபைஸலும் , மேனாள் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸின்ஜரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து அமர்ந்திருக்கின்றனர்.
விடுமுறைக்குப் பள்ளியைப் பூட்டுவதற்கு முன்பு ஒரு உல்லாசப் பயணம் செல்லலாம் என்று ரவி குழந்தைகளிடம் சொல்லியிருந்தான். செவ்வாய்க்கிழமை பள்ளி விடும்போது, எங்கே போக வேண்டும் என்று அவர்களிடம் கேட்டான்.
பாவத்தைத் தொலைக்கும் முயற்சியான ஹஜ் பயணம் நிறைவேற முன்னரேயே அதற்கான விளைவுகள் முதியவர் முஹம்மது மஜ்தின் உள்ளத்திலும் உடலிலும் சுனை நீர் போல சுரந்துகொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் குழந்தையாகத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றார். தன்னுடைய சொல்லிலும், செயலிலும், நோக்கத்திலும் ஒரு ஒத்திசைவைத் தொடர்ந்து பராமரித்துவரும் முதியவரின் வாழ்வு வந்தடையும் இடம் என்ன என்பதை இயக்குநர் படத்தின் கடைசி காட்சிகளில் அற்புதமாக சித்தரித்துள்ளார்.
இதன் மீது ஆயிரத்தி ஐந்நூறு வருடங்கள் நத்தையாகி ஊர்ந்திருக்கின்றன. தண்மை,வெம்மை, மறைவு, உதிப்பு, அல், பகல் என எத்தனை காலங்கள் எத்தனை பருவங்கள், எத்தனை வயதுகள், எத்தனை மனங்கள் எத்தனை மணிமுடிகள்? இதன் வெளியில் ஒடுங்கி கிடக்கின்றன?. சிற்ப அழகியலின் உள் ஒலிப்பாய் கொற்றம் அதிகாரம் பகட்டு, உழைப்பு சுரண்டல்களின் நெடி. எதனின் தொடர்ச்சியாக எது?. ஒன்றின் சாட்சியாக மற்றொன்று. விடைகளின் இன்மையில் தவித்தலையும் வினாக்களின் வெளி.