ரிஹ்லா சரந்தீப் – பாவா ஆதமின் பாத காணி 2
ரிஹ்லா ஷீத்(இராமநாதபுரம் மாவட்டம்) பயணத்தில் நாங்கள் தனுஷ்கோடியிலிருந்து திரும்பும்போது சரந்தீப் (இலங்கை) போவது குறித்த உரையாடல் எழுந்தது. ரிஹ்லா சரந்தீபிற்கான முதல் விதை அங்குதான் விழுந்தது. சுரண்டி ஒடுக்கியது காலனியம். அதனை தீர்க்கவந்த தேசமும்,தேசியமும் விடுதலைக்கான பெரு வழி என்பது போலதொரு தோற்ற மயக்கத்தை முதலில் உண்டுபண்ணி விட்டு பின்னர் அவைகளும் தானொரு தீர்வல்ல, காலனியங்களை உள்ளுக்குள் உண்டாக்கும் நோயின் நீட்சிதான் என்பதை நிரூபித்திருக்கின்றன இந்த பிரிவினைவாத கோடாரிக் கோட்பாடுகள் …