ரிஹ்லா சரந்தீப் – பாவா ஆதமின் பாத காணி 3
காலி மாவட்டத்தில் பார்க்க வேண்டிய தலையாய இடங்களில் இலங்கையின் புகழ் வாய்ந்த தலையாய சிங்கள எழுத்தாளர்களில் ஒருவரான மாடின் விக்கிரமசிங்கே (1890-1976)வின் வீடும், அதையொட்டிய அவரின் நினைவு / நாட்டாரியல் அருங்காட்சியகமும் ஒன்று என சிராஜ் மஷ்ஹூர் சொன்னார். ஒரு வழியாக தேடிப்பிடித்துச் சென்றோம். இலங்கையிலும் இந்தியாவைப்போலவே சுற்றுலாத்தலங்களில் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் கட்டணம் பெறப்படுகிறது. வெளிநாட்டுக்காரர்கள் ஏன் இங்கு வர வேண்டும்?என்பதைப்போலிருக்கிறது இக்கூடுதல் கட்டண வாங்கல்கள்.எனது முந்தைய இலங்கைப் பயணங்களில் …