மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல்
திருநெல்வேலி மாவட்டத்தை மூன்றாக வகிர்ந்த பிறகும் இன்னும் திருநெல்வேலி மாவட்டக்காரராகவே நீடிப்பவர் ஏர்வாடி காஜா காதர்மீறான் பந்தே நவாஸ். வருவாய் நிர்வாக அடிப்படையில் நான் தூத்துக்குடி மாவட்டத்துக்காரன் என்றாலும் பிறந்ததோ பிரிக்கப்படாத அகன்ற தாம்பாள திருநெல்வேலிச் சீமையில்தான். நிர்வாகப்பிரிவினைக்கு அப்பால் உணர்வாலும் நிலத்தாலும் தூத்துக்குடி,தென்காசி மாவட்டத்துக்காரர்கள் நெல்லையான்கள்தான். காயல்பட்டினம்/ஏர்வாடி வாசிகளுக்குமருத்துவ தேவைகளுக்கான அல்லது நெடும் பயணங்களுக்கான இடைவழி நகரமாகவே இருந்து வந்த திருநெல்வேலி நகரத்தை குறுக்கும் நெடுக்குமாக காலாற வேண்டும் …