ரிஹ்லா துளுநாடு – மொழிகளின் நிலம் 3
கேரள மாநிலம் கொண்டோட்டியிலுள்ள மாப்பிளா கலா அகாடமியின் மொக்ரால் கிளையின் சார்பாக மொக்ரால் பள்ளிக்கூடத்தில் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்வுகளும் பொது நிகழ்வுகளும் நிறைந்த நாள் என்ற போதிலும் தொலைவிலிருந்து வரும் எங்களுக்காக துரித ஏற்பாடொன்றைச் செய்திருந்தனர். காசர்கோடு மாவட்டம் என்பது நதிகளும் கோட்டைகளும் மொழிகளும் நிறைந்த பகுதியாகும். சப்த பாஷா சங்கம பூமி என்றழைக்கப்படும் அழகிய மாவட்டம். ஏழு மொழிகள் சங்கமிக்கும் நிலப்பகுதி என்றழைக்கப்பட்டாலும் …