பயணம்# 07ரிஹ்லா சிறுவாணி தங்கல் — நினைவுக்குறிப்புகள்– 3
ரிஹ்லா சிறுவாணி தங்கலுக்கு அப்பால் ….. ஏற்பாட்டாளர்கள் என்ற முறையில் நானும் உவைஸும் ஒரு நாள் முன்னதாகவே நிகழ்விடமான சத் தர்ஷன் இருக்கும் அட்டப்பாடிஅகழிப் பகுதிக்கு சென்று விட்டோம். ஒரு நாள் முழுவதுமாக கையிலிருப்பதால் அதைத் தொல்குடி பகுதிகளை பார்வையிடுவதில் செலவிடலாம் எனத் தீர்மானமாகியது. எனக்கு தனிப்பட்ட முறையில் அட்டப்பாடி தொல்குடி பகுதிகளுக்கு போவதென்பது கிட்டத்தட்ட பதினொரு ஆண்டு கனவு. முன்னணி ஆவணப்பட செயற்பாட்டாளரும் நண்பருமான ஆர்.பி.அமுதன் சென்னையில் நடத்திய …