பயணத்தை பயணத்திற்காக விதந்தோதுவதற்கல்ல இம்முயற்சி . நம் வாழ்க்கையை நாமே சற்று விலகி நின்று மூன்றாம் கண் கொண்டு பரிசீலிக்கவும், தொலைவுகளை கீழாக்கி கடக்கும் காலடித் தடங்கள் கொண்டு பல்வேறு செயற்கை பேத வேறுபாடுகளால் பின்னமாக்கும் எல்லைகளை மயக்கி மனித உறவுகளை மீள நெய்வதற்குமான ஓர் எத்தனம்.
கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்ற வடிவுருக்களுக்களின் கொடு நிழலுக்கெதிராக லியோபால்ட் முஹம்மது அசாதையும் வைக்கம் முஹம்மது பஷீரையும் மொய்து கிழிச்சேரிகளையும் நமக்கு முன்னில் காண்கிறோம்.
எளிமையும் இயல்பும் கூடிய வாழ்க்கையையும் ஆடம்பரத்தின் கொல்லைவாசல் வழியாக சந்தைப் பண்டமாக்கி கைக்கொள்ளும் அவல முரண் நகை காலத்தில் உயர்வு நவிற்சி, நுகர்வு பண்பாடு,வணிக மயம், துரிதம், நேரப்போக்கு போன்ற மீறல்களிலிருந்து பயணங்களை விடுவித்து அதன் இயல்பான ஒழுக்கில் சேர்ந்து ஒழுகுவதற்கான கூட்டு முயற்சி.
தவிர்க்கவியலாமல் மையப்படுத்தப்பட்ட பயண ஏற்பாடுகளைக் ரிஹ்லாவிற்கு கைக்கொள்ள வேண்டி வந்தாலும் மைய விலக்க பயணங்களுக்குள் நழுவி இயல்பான சமூக தன்னியல்பு நிகழ்வாக நிறைவதே ரிஹ்லா பயண முகமையின் நோக்கம்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த பகுதிகளிலுள்ள கூடுதல் கவனிக்கப்படாத சுற்றுலா ஈர்ப்பற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்ளுதல், ஒரு நாள் தொலைவை மூன்று நாட்களில் கடக்கும் ஆமைப்பயணம், மின்னல் பயணம் மாநிலங்கள், கண்டங்கள் கடத்தல் போன்ற ரிஹ்லாவின் நேரடி செயற்பாடுகளுக்கான நிய்யத்தும் உண்டு
இவற்றுடன் கடந்த கால நிகழ்கால பயண சாதனையாளர்களைப் போய்க் காணுதல்,புதிய பயண சாத்தியங்களை மனங்கொள்ளல்,தரமான பயணக்குறிப்புக்கள்,எழுத்துக்கள்.ஆசிரியர்கள்,விவரணைகள்,நூல்கள்,திரைப்படங்கள் என்பன போன்ற பெரியதும் சிறியதுமான விழைவுகளுக்கான ரிஹ்லா பயண முகமையின் மின்னணுக் குரலிது.
ஆசிரியர் குழு
- சிறகன், திருவண்ணாமலை
பள்ளி ஆசிரியர்,ஒளிப்படக்கலைஞர்,பறவைகள் ஆய்வாளர். ‘புழுதி’ இலக்கிய இதழின் ஆசிரியக்குழுவில் ஒருவர். இயற்கை ஆர்வலர்.பறவைகளை ஒளிப்படம் எடுக்க இரு சக்கர ஊர்தியில் பெரும்பான்மையான இந்திய நிலப்பகுதிகளில் சுற்றியவர்.தற்போது ரிஹ்லா மூலம் பயணங்களின் அடுத்த நிலையை அடைய நாட்டம்.
- உவைஸ் அஹமது,பள்ளப்பட்டி
எழுத்துகள்மீது கொண்ட ஈடுபாட்டால் தகவல் தொழில்நுட்பத் துறையைத் துறந்து பதிப்புத் துறையை முழு நேரமாக வரித்துக் கொண்டவர். சீர்மை பதிப்பகத்தில் பதிப்பாசிரியர். பதிப்புத்துறையின் சாத்திய எல்லையை விரிவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். அரசியலும் வரலாறுமே முதன்மை ஆர்வங்கள். தொழில்முறை சார்ந்த ஒருசில பயணங்கள் தவிர்த்துப் பெரிதாகப் பயண பட்டறிவுகளற்ற தன் கடந்த கால வெறுமையை ரிஹ்லா மூலம் நிரப்பிவிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
- சாளை பஷீர்,காயல்பட்டினம்
எழுத்தாளர்.
தொழிலுக்காகவும் வரலாறு, இலக்கியத்திற்காகவும் பயணங்களுக்காகவும் நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக திரிந்தவர்.எஞ்சியுள்ள காலத்தை சில பெரும் பயணங்கள், நிறைய குறும் பயணங்கள் மூலம் நிரப்பிட விழைபவர்.
இரா. முஹம்மது ஹசன், சென்னை.
வரலாற்றுத்துறை பேராசிரியர். அடித்தள மக்கள் வரலாறு, தலித், அம்பேத்கரிய இயக்கங்கள்,முஸ்லிம் அரசியல் வரலாறு போன்ற தளங்களில் ஆராய்ச்சி ஆர்வம் உடையவர். புத்தக வாசிப்பாளர்.
Most Asked Questions
Aenean in fringilla dui, nec ullamcorper leo. Curabitur lacus nulla, ultricies sit amet efficitur quis, congue lobortis magna. Proin hendrerit dolor sit amet erat convallis lobortis. Phasellus rhoncus eros nec ultricies luctus. Morbi suscipit pretium mi, eu faucibus odio fermentum sit amet. Pellentesque finibus dui quis odio vehicula gravida sit amet et nisi. Phasellus euismod sem nunc, ut efficitur massa imperdiet vitae. Donec vitae congue nulla. Vivamus non porta augue.
Vel aliquet diam. Suspendisse quis sodales risus. Quisque pharetra, lacus quis venenatis molestie, nibh tortor aliquam dui, id venenatis lectus metus id ipsum. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Suspendisse sit amet libero faucibus, finibus justo vitae, ultrices lectus. Quisque pharetra, lacus quis venenatis molestie, nibh tortor aliquam dui, id venenatis lectus metus id ipsum. Cras purus turpis, laoreet eget hendrerit id, ornare commodo augue. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Suspendisse sit amet libero faucibus, finibus justo vitae, ultrices lectus.
Lorem ipsum dolor sit amet, consectetuer rhoncus adipiscing elit. Aenean commodo ligula dolor aenean massa cum sociis. Donec eget est non elit egestas viverra sed eu justo. Pellentesque ultrices volutpat tincidunt. Morbi mattis nibh auctor ex faucibus fermentum. Sed quis metus vulputate, congue ex ac, feugiat nulla. Maecenas auctor, elit nec iaculis ullamcorper, dolor felis euismod est, ut efficitur enim ipsum ac est.
About Partnership