திருச்சிராப்பள்ளி — நகரமற்ற நகரம்
இதன் மீது ஆயிரத்தி ஐந்நூறு வருடங்கள் நத்தையாகி ஊர்ந்திருக்கின்றன. தண்மை,வெம்மை, மறைவு, உதிப்பு, அல், பகல் என எத்தனை காலங்கள் எத்தனை பருவங்கள், எத்தனை வயதுகள், எத்தனை மனங்கள் எத்தனை மணிமுடிகள்? இதன் வெளியில் ஒடுங்கி கிடக்கின்றன?. சிற்ப அழகியலின் உள் ஒலிப்பாய் கொற்றம் அதிகாரம் பகட்டு, உழைப்பு சுரண்டல்களின் நெடி. எதனின் தொடர்ச்சியாக எது?. ஒன்றின் சாட்சியாக மற்றொன்று. விடைகளின் இன்மையில் தவித்தலையும் வினாக்களின் வெளி.