திருவிதாங்கூர் — தென்னெல்லையா? தென் தொல்லையா?
திருவிதாங்கூர் — தென்னெல்லையா? தென் தொல்லையா? தனக்கானதை மீட்ட பெருமித உணர்வாக தமிழ் நாட்டிற்கும் தனது பறிக்கப்பட்ட கரமாக கேரளத்திற்கும் தோன்றும் நிலப்பரப்பு குமரி மாவட்டம். அய்ந்திணைகளில் பாலையைத் தவிர்த்து நான்கு திணைகளையும் தன்னுள் கொண்டுள்ள நிலம். மொழிப்பிரிவு,சாதிப் பிளவு,மன்னராட்சிக் கொடுமை என வேறுபட்ட சுடு திரவக்கலவை கொண்ட நிலம்.தமிழக கேரள முஸ்லிம்களுக்கோ அவர்களுடைய இணைப்பின் முந்நீர்க்கபாடம் அமைந்துள்ள மண். ஒரு தலைமுறை காலத்திற்கும் மேலாக இம்மண்ணில் உலா வருபவன் …