பன்னிரண்டணா சுல்தான்
“நான் பள்ளிக்கூடம் போவதற்கில்லை. வீட்டிற்கும் இப்போதைக்கு வரப் போவதில்லை” நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக வீடு துறந்து கோழிக்கோட்டிற்கு தப்பிச்சென்ற வைக்கம் முஹம்மது பஷீர், தன்னை அழைத்து போக வந்த தந்தையிடம் கையளித்த சொற்கள் இது. மகன் உதிர்த்த சொற்களின் பாரம் உண்டாக்கிய சோர்வு துயரம் கண்ணீர் எல்லாம் ஒரு சேர கொப்பளிக்க வெறுங்கையுடன் திரும்பினார் வைக்கம் முஹம்மது பஷீரின் வாப்பா. தங்களின் பிள்ளைகளின் மீது எந்தவொரு சராசரி பெற்றோருக்கும் …