கசாக்கின் இதிகாசம் – எழுத்து கிராமம்
கசாக்கின் இதிகாசம் – எழுத்து கிராமம் விடுமுறைக்குப் பள்ளியைப் பூட்டுவதற்கு முன்பு ஒரு உல்லாசப் பயணம் செல்லலாம் என்று ரவி குழந்தைகளிடம் சொல்லியிருந்தான். செவ்வாய்க்கிழமை பள்ளி விடும்போது, எங்கே போக வேண்டும் என்று அவர்களிடம் கேட்டான். “பாலக்காட்டிய்க்கி, ஸார்,” யாரோ சொன்னார்கள். “பாலக்காட்டுல என்ன இருக்கு?” ரவி கேட்டான். “கோட்ட.” “கோர்ட்டு.” “ஆஸ்பத்திரி.” “அஞ்சுவௌக்கு.” பலரும் அப்படிச் சொல்லிச் சென்றார்கள். “சரி,” ரவி சொன்னான், “வேறங்க போகறதுக்கு இஷ்டம்னு சொல்லுங்க.” …