ஆகஸ்ட் 30 ஆம் தேதிய ஜுமுஆ இலங்கையின் கிழக்கில் உள்ள பழங்கால முஸ்லிம் குடியேற்றமான அக்கரைப்பற்று பெரியபள்ளி வாசலில் இடம்பெற்றது.
பொதுவாக, இலங்கை பள்ளிவாயல்களில் குத்பா தமிழில் இருக்கும். பள்ளிவாயல்கள் அதன் சுற்றுப்புறங்கள் தோட்டம் போன்றவை. இலங்கை முஸ்லிம்கள் மரங்கள்,பூச்செடிகளை நடுதல் ,பராமரிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துவதாக தெரிகிறது.
பெரும்பாலும் மசூதிகளுடன் தொடர்புடைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஜகாத் அமைப்பு உள்ளது. கண்டியின் மலைப்பாங்கான பகுதியான அக்குறனையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் உள்ள ஒரு தனித்துவமான காட்சி, பொதுமக்களுக்கு ஃபத்வாக்களை (மதத் தீர்ப்புகள்) வழங்குவதற்காக பள்ளிவாசலுக்கு வெளியே நிரந்தர ஃபத்வா சாளரம் ஆகும். விசேஷ கடமைகள் கொண்ட ஒரு அறிஞர் இருப்பார். இது போன்ற பல முன்மாதிரியான நல்ல விஷயங்கள் இலங்கை முஸ்லிம்களின் சமூக வாழ்க்கையை மிகவும் அழகாக்குகிறது.