பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வந்திறங்கினோம். உலகத்தரம் வாய்ந்த இந்த விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களில் கோழிக்கோடு சாலியத்தைச் சேர்ந்த உம்பிச்சி ஹாஜியும் ஒருவர் என்ற வரலாறு பலருக்கும் தெரியாது.
இப்போதும் கொழும்பில் உம்பிச்சி தெரு என்றொரு தெரு இருக்கிறது, கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூரில் இருந்து கடல் கடந்து வந்து உலர் மீன் வியாபாரம் செய்து கோடீஸ்வரனான உம்பிச்சி என்ற ஏழைப் பையனின் கதையைச் சொல்கின்றன இந்தத் தெருவும் பள்ளிவாசலும்.
இங்கு பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி வணிகப் புரட்சியை ஏற்படுத்திய வரலாற்று நாயகன் உம்பிச்சி ஹாஜி. கொழும்பின் வெளிப்புறக் கோட்டையிலும் கட்டுப்பெட்டி வரையிலும் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் உம்பிச்சி ஹாஜிக்கு சொந்தமானவை.
மலையாளிகள் உட்பட பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கிய உம்பிச்சிஹாஜி 1936ஆம் ஆண்டு தனது 82ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.
வர்த்தக அதிபராக இருந்த அவரது மரணம் இலங்கைப் பத்திரிகைகளில் மூன்று நாட்கள் செய்தியாக வெளிவந்தன. பிரிட்டிஷ் பாராளுமன்றம் கூட இரங்கல் கூட்டத்தை நடத்தியது.
இலங்கை அரசாங்கம் இந்த மலையாளிக்கு இணை நீதிபதி என்று பொருள்படும் சமாதான நீதியரசர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. அவரது அடக்கம் மஸ்ஜித் லாஃபிரின் மைய்யத்துக்காட்டில் நடந்தது, இது உம்பிச்சிஹாஜி அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டது. அதற்கு அரசு சிறப்பு அனுமதியும் வழங்கி இருந்தது.