அனந்தபுரி
எனது திருவனந்தபுரப் பயணங்கள் பெரும்பாலும் வானொலி நிலைய கதை சொல்லலுக்காகவே அண்மை வருடங்களாக நடைபெறுகின்றன.
சாரம்,போர்வை,துவாலை, முப்பது ரூபாய் சட்டை, சோப்புடன் தாள் சுருளில் கொஞ்சம் முகப்பொடி,பற்பொடி அடங்கிய கட்டைப்பை துணையாக தமிழ்நாட்டின் பெரும் பகுதியில் இயக்க வாழ்க்கைக்காக திரிந்த நாட்கள். உடுப்புகளை அன்றன்றைக்கு அலசி விடுவதுண்டு.1998 ஆம் ஆண்டு வணிக வாழ்க்கைக்குள் வரும் வரைக்கும் துணிகளுக்கு இஸ்திரி என்பதே இல்லை. பையில் புதியது எதற்காவது இடமென்றால் அது இதழ்களுக்கும் கடலை மிட்டாய்க்கும் மட்டும்தான்.